மேஷ ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் நீங்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.