ரிஷப ராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர் கள். நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.