மீனம்
“காசேதான் கடவுளப்பா” என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தால் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். வருமானம் பெருகி மன மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்குவீர்கள். நண்பர்களின் ஒத்தாசையை பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள்.