யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிலவி வரும் குழப்பமான நிலையிலேயே அவர் தற்போது புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
பதில் வைத்திய அத்தியட்சகர்
இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் அர்ச்சுனா (Dr Archchuna) மக்களிடம் உறுதியளித்து கொழும்பு சென்றுள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன். தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.
எனவே மக்கள் பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை. மக்கள் என் மீது வைத்த அன்புக்கு நன்றி. மீண்டும் வருவேன் என மேலும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.