ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று(11) முற்பகல் சந்தித்த அவர் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.