கன்னி ராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும் பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.