துலா ராசி அன்பர்களே!
இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று மகாலட்சுமியை வழிபட பல வகை களிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.