தனுசு ராசி அன்பர்களே!
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆஞ்சநேயரை வழிபட புதிய முயற்சிகள் சாதகமாகும்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.