ரிஷபம்
கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் உச்சம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் செல்வாக்குப் பெறுவீர்கள். கழுத்து வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.