இலங்கையில் இன்றைய தினம் (27.05.2024) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
இன்றைய தங்க நிலவரம்
இந்த நிலையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.