கண்டி மாவட்டத்தில் கணவனை மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று (08-09-2024) காலை தெல்தெனிய, உடகம்மெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் கணவருடன் ஏற்பட்ட தகராறில் நடத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரான மனைவியும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.