இஸ்ரேல் மற்றும் லெபனானில் இருந்து செயற்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான மோதல் அதிகரித்து வரும் சூழலில், லெபனானின் பெய்ரூட் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் குறித்த தாக்குதலில் நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.மேலும், அல்-பச்சவுரா பகுதியில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன், ஹரெத் ஹிரீக் பகுதியில் வான்வழியே 3 கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.