கடக ராசி அன்பர்களே!
சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரவகையில் சங்கடங்கள் உண்டாகும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.