[{“des”:”இதன்படி, தாய்லாந்து (Thailand), சீனா (China), பெலாரஸ் (Belarus), கஜகஸ்தான் (kazakhstan), ஈரான் (Iran) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிகார அமைச்சர்களை அலி சப்ரி சந்தித்துள்ளார்.”},{“des”:”பிரிக்ஸ் (BRICS) மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட அமர்வில் பங்கேற்ற அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை (Sergey Lavrov) நேற்று சந்தித்திருந்தார்.”},{“des”:””},{“des”:”இந்த நிலையில், குறித்த மாநாட்டின் பக்க சந்திப்பாக பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தான் சந்தித்ததாக, அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”இதற்கமைய, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகேரி கனிக்கும் (Ali Bagheri Kani) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இரு தரப்பு உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.”},{“des”:”சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.”},{“des”:”இதனை தொடர்ந்து, கஜகஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முராத் நூர்ட்லுவை (Murat Nurtleu) சந்தித்த அலி சப்ரி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.”},{“des”:””},{“des”:”Met with Kazakhstan’s Foreign Minister Murat Nurtleu on the sidelines of the #BRICS Foreign Ministers meeting in Nizhny Novgorod., #Russia. We had fruitful discussions on strengthening our bilateral relationship. Excited to announce that #SriLanka will establish its first mission… pic.twitter.com/kmlkc2ATC7″},{“des”:””},{“des”:””},{“des”:”கல்வி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை தொடர்பில் பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி அலினிக் (Sergei Aleinik) உடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியதுடன், இரண்டு நாடுகளிலும் வெளிநாட்டு அலுவலகத்தை உடனடியாக ஸ்தாபிப்பது தொடர்பான பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளார்.”},{“des”:””},{“des”:”Pleased to meet with the Foreign Minister of #Belarus Sergei Aleinik on the sidelines of the #BRICS Foreign Ministers meeting in Nizhny Novgorod, #Russia. We discussed the areas of education, trade, investment & tourism promotion. We further agreed to immediately resume Foriegn… pic.twitter.com/6WEgqk4O0D”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”அத்துடன், சீன வெளிவிகார அமைச்சர் வெங் யீவை (Wang Yi) அலி சப்ரி சந்தித்துள்ளதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.”},{“des”:”மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சாவை (Maris Sangiampongsa) சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் சந்தித்துள்ளார்.”},{“des”:”அவரது நியமனத்துக்கு வாழ்த்து தெரிவித்த அலி சப்ரி, தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.”},{“des”:””},{“des”:”Good to meet with the newly appointed Foreign Minister of #Thailand Maris Sangiampongsa on the sidelines of #BRICS Foreign Ministers meeting in Nizhny Novgorod, #Russia. I congratulated him and we agreed to work together to carry forward the decisions agreed when the Prime… pic.twitter.com/1Kv4hxRvcK”},{“des”:””},{“des”:””},{“des”:””}]