சமீபத்தில் திடீர் திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை டாப்ஸியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை டாப்ஸி
தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை டாப்ஸி தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.
அதனை தொடர்ந்து வந்தான் வென்றான் ,வை ரா வை போன்ற வெற்றி படங்களில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர்.
தற்போது ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திடீர் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது சிவப்பு நேர சேலையில் டாப்ஸி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.