2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழாவில் நியூஸ்ஃபெஸ்ட், சக்தி மற்றும் சிரச ஊடகங்கள் இன்று விருதுகளை சுவீகரித்தன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2024 – தமிழ் ஊடகப் பிரிவிற்கான தங்க விருதை சக்தி தொலைக்காட்சி தனதாக்கியது.
தமிழ் ஊடகப் பிரிவிற்கான விருதை சக்தி FM சுவீகரித்தது.
தமிழ் பிரத்தியேக ஊடகப் பிரிவிற்கான விருதை சக்தி FM-இன் கீர்த்தனன் பாக்கியராஜா வென்றதுடன், பிரத்தியேக ஆங்கில ஊடகப் பிரிவிற்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட்டின் சுல்ஃபிக் பர்ஸான் தனதாக்கினார்.
ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2024 – ஊடகப் பிரிவிற்கான சிங்கள மொழிப் பிரிவிற்கான விருதை சிரச FM தனதாக்கியதுடன், தொலைக்காட்சி ஊடகப் பிரிவிற்கான வௌ்ளி விருதை நியூஸ்ஃபெஸ்ட் சுவீகரித்தது.
அத்துடன், ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2024 – வானொலி ஊடகப் பிரிவிற்கான வௌ்ளி விருதை சிரச FM வென்றது.