இரத்தினபுரி (Ratnapura), நிவித்திகல – நிரியெல்ல பகுதியில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தரம் 11இல் கல்வி கற்றுவரும் மாணவரொருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகுறித்த மாணவன், இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரும், அவரது மனைவியும் இணைந்து தாக்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.