அதிதி – விருமன்
மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி – கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
Film Fare
ஏற்கனவே விருமன் படத்தில் அறிமுகமாகி நடித்ததற்கு மூன்று விருதுகளை பெற்ற அதிதி தற்போது சிறந்த அறிமுக நடிகைக்கான Film Fare விருதினையும் வாங்கியுள்ளார். அறிமுகப்படத்திற்கு மட்டும் இதுவரை 4 விருதினை பெற்றிருக்கும் அதிதி சங்கருக்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.