தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் சமந்தா. விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.
தனக்கென்று திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ள சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் குறித்து புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் மொத்தம் 1000 மதிப்பெண்ணுக்கு 887 எடுத்துள்ளார் சமந்தா. மேலும் இவர் தான் நம்பர் 1 Rank பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, படிப்பிலும் புலியாக தான் இருந்துள்ளார் என இதில் தெரிகிறது. ஆனால், இந்த மார்க் ஷீட் உண்மையில்லை என்றும் கூறி சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.