நாட்டின் அபிவிருத்திக்கு தேர்தல்கள் எப்போதும் தடையாக இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.
வாரப் பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எப்போதும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை
இந்த நாட்டில் வாக்குகள் எப்போதும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
அரசியலமைப்பின் 27, 28, 29 ஆகிய பிரிவுகளின் கீழ் அதிபரை பலப்படுத்தவில்லை.
தேர்தல் தினத்தை அறிவித்த ரணில்
எனவே, இது ஒரு கருத்து மட்டுமே. அதிபர் ரணில் தேர்தலை ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதாக அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.