இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்தும் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்றையதினம் (21-09-2024) மதியம் செக்டார் 25 பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் பொலிஸும், ஆம்புலன்சும் விரைந்தன. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.