கேகாலை (Kegalle) காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொலகொட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் (Criminal Investigation Department ) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இன்று காலை (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைசம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது, சாரதியிடம் 31 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
வலகம தெற்கு, தெவலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.