[{“des”:”மியன்மாரில் (Myanmar) இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”},{“des”:”தமது மியன்மார் விஜயத்தின் போது இந்த விடயம் தெரிய வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Tharaka Balasuriya) தெரிவித்துள்ளார்.”},{“des”:”அந்த நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்றைய தினம் இலங்கைக்கு (Sri Lanka) மீள திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:”இதன்படி மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.”},{“des”:””},{“des”:”அவர்களை விரைவில் மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தாரக பாலசூரிய சுட்டிக்காட்டினார்.”},{“des”:”இதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலில் (Russo-Ukrainian War) பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.”},{“des”:””},{“des”:””},{“des”:”குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.”},{“des”:””},{“des”:”இதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவினர் ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”},{“des”:””},{“des”:””},{“des”:””}]