லண்டனில் Hackney பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய 9 வயது சிறுமியின் தற்போதைய நிலை தொடர்பில் அவரது பாட்டி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டாவை அகற்ற முடியவில்லை
கடந்த புதன்கிழமை துருக்கி உணவகம் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், 9 வயது சிறுமி மரியா மீது குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி மரியா உள்ளார்.
ஆனால் மருத்துவர்களால் தோட்டாவை அகற்ற முடியவில்லை என சிறுமியின் பாட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு லண்டனில் Hackney பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
துருக்கி உணவகத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் உணவருந்திய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது வெளியான நடுங்கவைக்கும் தகவலில், தலையில் குண்டு பாய்ந்த நிலையில் தொடர்புடைய இந்திய சிறுமி வென்டிலேட்டரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இறைவனை பிரார்த்திக்கிறோம்
அவரது பாட்டி தெரிவிக்கையில், லண்டன் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களால் தோட்டாவை அகற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். முதன்மையான அறுவை சிகிச்சைக்கு பிறகும் மருத்துவர்களால் தோட்டாவை அகற்ற முடியவில்லை எனவும்,
இன்னொரு முக்கியமான அறுவை சிகிச்சை 2 நாட்களில் முன்னெடுக்க இருப்பதாகவும், அவர் உயிர் பிழைத்து பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும் அந்த பாட்டி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயங்களுடன் தப்பிய மூவர் தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதாரியை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.